சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Wednesday, November 25, 2015

போதை தெளிவது எப்போது?


திருச்செங்கோட்டில்  மது அருந்தி விட்டு தேர்வறையில் மயங்கி விழுந்த 7  மாணவிகள் பள்ளியை விட்டு நீக்கம் - செய்தி 
         இந்த செய்தி நமக்கு எந்த அதிர்ச்சியையோ கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. இல்லை இது அதிர்ச்சியான சம்பவம் தான் கோபபட வேண்டிய விஷயம் தான் என்று நீங்கள் கருதினால் நீங்கள் தற்கால உலகத்தில் இல்லை என்று அர்த்தம். நீங்கள் அந்த காலத்து ஆள்  (நீங்க இன்னும் வளரனும் தம்பி)
     செய்திகளில் நீங்கள் படித்திருக்கலாம். “வெளிநாட்டில் பள்ளியில் மாணவன் துப்பாக்கியால் சக மாணவனை சுட்டான்” அவர்களுக்கு துப்பாக்கி சகஜமாக கிடைக்கிறது. நமக்கு மது சாதாரணமாக கிடைக்கிறது.
    இது போன்ற சம்பவங்கள் நமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இவை நாம் எதிர்பார்த்ததுதான்.
          எங்களின் பள்ளி பிராயத்தில்.........

Tuesday, November 24, 2015

ஊரெங்கும் மழை வெள்ளம்


யாரென்றே தெரியாத கோவனை உலகறியச் செய்து விட்டது ஆட்சி அதிகாரம் . சிறை மீண்ட கோவன் தன் அடுத்த பாடலை கொளுத்தி போட்டிருக்கிறார். களம் நோக்கி விரையும் கால்களை நெருஞ்சி முட்கள் என்ன செய்யும் என்பதற்கு கோவன் வாழும் சாட்சியம்

Friday, November 20, 2015

கொடுக்கப் படாத
பெறப்படாத
முத்தங்கள் எல்லாமே
சுவாரஸ்யமானது தான் 
ஆயிரம் கண்கள் ஒருசேர தன்னையே மொய்ப்பது தெரிந்தும் அலட்சியப்படுத்தி அநாயாசமாய் கடந்து செல்லும் ஒரு திருநங்கையின் "எதிர்கொள்ளல்" நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது!
நூறு சதவிகிதம் 
உண்மையானதாக இருக்கிறது 
ஆத்மார்த்தமாய் ,பாசமுள்ளதாய் ,
நாகரிகமாய்,

அவனுக்கு தெரியும்


வனுக்கு தெரியும்
இனிமேல் அந்த நிலம்
அவனுக்கு சொந்தமில்லை என்பது.
அந்த வழியாக போகும் போது 
அவனோ அவன் வாரிசுகளோ
சத்தமில்லாமல் சொல்லிக்கொள்ளலாம்
ஒரு காலத்தில் அது எங்களுடய நிலமாக
இருந்தது என்று.
ஆனாலும் அவனுக்கு தெரியும்
இனி ஒரு போதும் அந்த நிலம்
தனக்கு கிடைக்க போவதில்லை என்பது .
அவனுக்கு தெரியும்
இனிமேல் அந்த இடத்தில்
பயிர் பச்சைகளுக்கு சாத்தியமில்லை என்பது
அவனுக்கு தெரியும் 

குழந்தை மனசு

ண்
நீர்
குப்பை கீரை
மூன்றையும் கலந்து
சும்மாங்காச்சும் சாபிடுகின்ற
கூட்டஞ்சோறு விளையாட்டில்
எல்லா குழந்தைகளும்
பகிர்ந்து சாபிடுகின்றனர்

நேற்று
உன்னை அடித்த ராஜாவுடன் சேராதே
என்று அம்மா சொல்லியும்
ராஜாவை
வண்டி ஒட்டி விளையாட
கூப்பிடுகிறான் மணி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைக்குழந்தையின் 
கால் கொழுசை தடவிய படி 


குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய் குடங்களோடு அலைந்தோம்
எங்கள் துயரம் தீர்க்க
எம் எல் ஏ தேடினோம் தொலைபேசியில்
எப்பொழுது கேட்டாலும் கிடைத்த பதில்
தூங்குகிறார்
குளித்து கொண்டிருக்கிறார்