சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Wednesday, December 16, 2015

தீர்ப்பு


ன் கண்முன்னே ஒரு
ஒரு கொலை செய்யுங்கள்

நீங்கள் கருணையற்றுப் புணர்ந்த
ஒருவல்லுறவுக்கு நான்தான் சாட்சி

நீங்கள் அடித்த கொள்ளைக்கும்
கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதென்று
நீங்கள் செய்த காரியங்களுக்கும் 
நான்தான் ஆதாரம்

இன்னும் இன்னும்
நீங்கள் செய்த
சட்டத்திற்கு புறம்பான
சட்டத்திற்கு ஆகாத
செயல்கள் அனைத்திற்கும்
நான்தான் ஒரே சாட்சி

பயப்படாதீர்கள்
எப்பொழுதும் போலிருங்கள்
ஒன்றும் பிரச்னை இல்லை
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்
நான் எங்கேயும் போக போவதில்லை

இன்று
மனு நீதிச் சோழனின்
தேர்ச்சக்கரங்கள்
கன்றையும் கொன்றுவிட்டு
ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டிருந்த
பசுவையும், அசுர பசியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது 
எனக்குத் தெரியும்
                    

Tuesday, December 15, 2015



சிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலையை எதிர்நோக்கி காத்துகொண்டிருந்த காலம். கவிதை, ஓவியம், நூலகம், தூக்கம் என்று பொழுதை கழித்துகொண்டிருந்தேன். அப்பொழுது வரைந்த ஓவியங்கள் இவை. 
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் வரைய ஓர் நாள் பிடித்தது (கற்பனை ஓவியம் அல்ல. பார்த்து வரைந்தது தான்.இசைக்கருவிகள்  ஓவியம் மட்டும் கற்பனை). கருப்பு மை gel பேனா மட்டுமே பயன்படுத்தி வரையப்பட்டவை. 
இப்பொழுதெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிகொண்டிருக்கிறேன்.