சிந்தனைக்கு

உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்

Monday, August 29, 2016

பாலபாரதி கவிதைகள்

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைக்குழந்தையின் 
கால் கொழுசை தடவிய படி 

குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய் குடங்களோடு அலைந்தோம்
எங்கள் துயரம் தீர்க்க
எம் எல் ஏ தேடினோம் தொலைபேசியில்
எப்பொழுது கேட்டாலும் கிடைத்த பதில்
தூங்குகிறார்
குளித்து கொண்டிருக்கிறார்

கல்யாண்ஜி கவிதைகள்

முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை


ல்லாம் அடையும் தூரத்தில்
இடையில் தடையாய்
சில எச்சில் பருக்கைகள் 



ருந்து என்ன ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம் 


இடப்பெயர்ச்சி 
ருப்பு வளையல் கையுடன்
குனித்து வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு 


  கோடை 
நாணல் முளைத்து
தண்ணீர் கரை நனைத்து
நதியெல்லாம் மணல் பாய
குளித்து கரையேறும்
கல் மலர்கள்


ன்னையா நீ காதலிக்கிறாய் ?”
ஆமாம் அப்படித்தான்
என் காதல் கரை பட்டது
இருக்கட்டுமே
உன்னை பட சொன்னால்.....
"பாடுவேன்"
உன்னை  துய்க்க நினைத்தால்
"ஒரு சைகை போதுமே"
நம்மிடையே ஒரு சுவர் எழுகிறது
"உடைப்பேன்"
ஒரு முடிச்சு
அறுத்தெறிவேன்
உன்னை நான் கொன்று விட்டால் ?
மரணம் இனிப்பானது
இன்னும் என்னைக் காதலிக்கிறாயா?
சின்னன் சிறார்கள் சிரிக்கிறார்கள்
நான் அஞ்சுகிறேன்
ஆப்பிள் மரங்கள்
வெள்ளை பூக்களை வெளியிடுகின்றன
நான் அஞ்சுகிறேன்
இரண்டையும்
அணு ஆயுதங்களின் கண்கள்
கவனித்துக்கொண்டே இருக்கின்றன
-ரசூல் சோவியத் யூனியன் 

ஏசுநாதர் ஏன் வரவில்லை?

லை காது மூக்கு கை மார்பு விரல்
தாள் என்ற எட்டுறுப்பும்
தங்க நகை வெள்ளை நகை ரத்தினமிளைத்த நகை
தையலர்கள் அணியாமலும்
விலை குறைந்த ஆடைகள் அணிந்துமே கோயில் வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விசமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள் புருஷர்
நிலை கண்ட பாதிரி பின் எட்டு உறுப்பே அன்றி
நீள் இமைகள் உதடு நாக்கு
நிறைய நகை போடலாம் கோயிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடியும் உண்டென